மதுரை அருகே பரவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது வழக்குப் பதிவு
மதுரை, பரவையில் திருமணம் நிச்சயம் செய்து விட்டு கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மாவட்டம் பரவை வித்தியாவாகினி அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் சந்திரலேகா வயது 28/21, இவர் சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் . அதில் அவர் கூறியுள்ளதாவது, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் வயது 32/21, என்பவர் தனியார் திருமண இணையதளம் மூலம் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதற்கு எங்களது குடும்பத்தாரிடம் வீட்டில் வந்து பேசினர். அதன்படி திருமண நிச்சியதார்த்தம் கடந்த 2020 ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு கூடுதல் வரதட்சனை கேட்டு திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதன் பின்னர் பேசவும் இல்லை. எனவே அவர் மீது கூடுதல் வரதட்சணை புகார் மற்றும் திருமண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் சமயநல்லூர் போலீசார் கூடுதல் வரதட்சணை கேட்ட சேலத்தை சேர்ந்த ராஜ்குமார் அவரது தந்தை பரமேஸ்வரன், அவரது தாய் பூங்கோதை ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.