ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த 3 குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு . S. விஜய் தலைமையிலான H8 திருவொற்றியூர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 17.07.2021 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
Commissioner of Police, Greater Chennai Police rewarded the Sub Inspector of Police Tr. S.Vijay, and H8 Thiruvottriyur Police team, who arrested three accused for smuggling Ganja in a car at Thiruvottriyur area. (17.07.2021)
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு . A.T. துரைகுமார் , இ.கா.ப. , அவர்களின் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் திரு . S. விஜய் தலைமையில், தலைமைக் காவலர் திரு.பிரபு (த.கா.17288), முதல்நிலைக் காவலர் திரு முருகேஸ்வரன், (மு.நி.கா.35802), காவலர் சதாசிவம் (கா.31592), ஊர்க்காவல் படை வீரர்கள் சரத்குமார் (HG 270) மற்றும் அருண்ராஜா (HG 4417) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 15.07.2021 அன்று காலை திருவொற்றியூர், பேசின் ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த 2 கார்களை நிறுத்தி விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அதில் சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 1) சிவபிரசாத் (வ/24) , 2) ரங்கோலி ராஜேஷ் ரெட்டி (எ) சுரேஷ் (வ/32) மற்றும் 3) சந்தோஷ் ( வ/30) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 114 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவொற்றியூர் பகுதியில் 114 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 குற்றவாளிகளை கைது செய்த உதவி ஆய்வாளர் திரு.எஸ்.விஜய் , தலைமைக்காவலர் திரு.பிரபு, முதல்நிலைக் காவலர் திரு.முருகேஸ்வரன் , காவலர் சதாசிவம் , ஊர்க்காவல் படை வீரர்கள் சரத்கும�