ஆன் லைன் பத்திரிக்கை சட்டப்படியானதா?
பொதுவாக ஒருவர் ஆன் லைன் பத்திரிக்கையோ வார இதழையோ மாத இதழையோ தின நாளிதழையோ நடத்த விரும்புகிறார் என்றால் இந்திய அரசியல் சாசனம் 1950 ல் கோட்பாடு 19 ன் கீழ் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரத்தின்படி ஆரம்பித்து விடலாம்
ஆனால் அவர் ஆரம்பிக்கும் பத்திரிக்கைகக்கு மத்திய மாநில அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் கண்டிப்பாக அச்சகம் மற்றும் புத்தகப் பதிவாளர் சட்டம் 1867 ன்படி இந்திய செய்தித்தாள் பதிவு எண் வாங்கத்தான் வேண்டும் வாங்கிய பிறகு வரவு செலவு தணிக்கைகளை அரசிற்கு காட்டத்தான் வேண்டும் பெரும்பாலானோர் இந்திய செய்தி தாள் பதிவு எண் வாங்த்தான் ஆசைப்படுவார்கள் ஆனால் ஆன் லைன் பத்திரிக்கைக்கு இந்த எண் கிடையாது. இந்தியாவில் உள்ள முதன்மையான இந்திய அரசியல் சாசனம் 1950 ல் கோட்பாடு 19 ன் படி இது செல்லத்தக்கது.