
பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு.
மதுரை மாநகரில், அரசு உத்தரவுப்படி காவல்நிலைய எல்லைகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
1 ) . மதுரை மாவட்டம் பெருங்குடி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட வார்டு எண்.10 ற்கு ( பெருங்குடி பஞ்சாயத்தது ) உட்பட்ட மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மதுரை மாநகர் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.
2 ) . மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய எல்கைக்குட்பட்ட தனக்கங்குளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த பகுதிகள் ( இந்திரா நகர், ஆஞ்சநேயர் நகர், அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்கம், திருவள்ளுவர் நகர் மத்தி, குறிஞ்சி நகர், அரவிந்நகர், பி.ஆர்.சி.காலனி, கலைநகர், காமராஜ் தெரு, தனக்கங்குளம், ஜெயம் நகர், கிருஷ்ணா நகர், ஐயர் காலனி, நேதாஜி நகர், யோகா நகர், கார்த்திகா நகர், சாந்தி நகர், மீனாட்சி நகர், முல்லை நகர்) மற்றும் விளாச்சேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த பகுதிகள் (மொட்டமலை, கே.கே.நகர் கலைநகர் , ஆதிசிவன் நகர், விளாச்சேரி வடக்கு முஸ்லீம் தெரு, விளாச்சேரி தெற்கு முஸ்லீம் தெரு, வேலர் தெரு, காந்தி தெரு, செட்டி தெரு, யாதவர் தெரு, நேதாஜி தெரு, அக்ரகாரம், சேவுகர் தெரு, கொட்டாரம், விளாச்சேரி பிரதான சாலை, அண்ணா தெரு ஆகிய பகுதிகள் மதுரை மாநகர் W1 திருநகர் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.
3 ) . மதுரை மாநகர் v2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்துவந்த வார்டு எண்.60 – க்கு உட்பட்ட பகுதிகளான பிரசன்னா காலனி, சின்ன உடைப்பு முதல் சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு வரை (சுற்றுச்சாலையின் வடபகுதிகள்) மதுரை மாவட்டம் பெருங்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலும், வார்டு எண்.60 – க்கு ( அவனியாபுரம் ) உட்பட்ட பகுதிகளான சேர்மத்தாய் வாசன் கல்லூரி சந்திப்பு முதல் கல்லம்பல் பாலம் வரை ( அய்யனார்புரத்தின் தெற்குபகுதிகள் ) மதுரை மாவட்டம் சிலைமான் காவல்நிலைய கட்டுப்பாட்டிலும் இணைக்கப்படுகின்றன.
4 ) . மதுரை மாநகர் W1 திருநகர் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்து வந்த வார்டு எண் .96 - க்கு ( திருப்பரங்குன்றம் ) உட்பட்ட பகுதிகளான ஓம் சக்தி நகர் 1 வது, 2 வது மற்றும் 3 வது தெருக்கள் மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல்நிலைய கட்டுப்பாட்டிலும் இணைக்கப்படுகின்றன.
5 ). மதுரை மாநகர் C2 சுப்பிரமணியபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்துவந்த வார்டு எண்.95 – க்கு ( மன்னர் கல்லூரி ) உட்பட்ட பகுதிகளான பசுமலை அண்ணாநகர், புது அம்பேத்கர் நகர், பெத்தானி நகர், வார்டு எண்.75 – ற்க்கு ( மாடக்குளம் ) உட்பட்ட பகுதிகளான முனியாண்டிபுரம் , கோபாளிபுரம், மாடக்குளம் பிரதான சாலை மற்றும் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்து வந்த வார்டு எண்.96 – க்கு ( திருப்பரங்குன்றம் ) உட்பட்ட செங்குன்றம் நகர், தியாகராஜர் கல்லூரி ஆகிய பகுதிகள் மதுரை மாநகர் V1 திருப்பரங்குன்றம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.
6 ) . மதுரை மாநகர் V2 அவனியாபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருந்துவந்த வார்டு எண் .57 ( அனுப்பானடி ), வார்டு எண் .58 ( சிந்தாமணி ) உட்பட்ட அனைத்து பகுதிகளும் மதுரை மாநகர் B4 கீரைத்துறை காவல்நிலைய கட்டுப்பாட்டிலும், வார்டு எண்.61 – க்கு ( வில்லாபுரம் புதுநகர் ) உட்பட்ட தென்றல் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகள் மதுரை மாநகர் B6 ஜெய்ஹிந்தபுரம் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்படுகின்றன.
