
இறப்பு நிகழ்வுக்கு வந்தவரை, அரிவாளால் வெட்டிய ரவுடிகள், அவனியாபுரம் போலீசார் நடவடிக்கை
சென்னை கொடுங்கையூர் கனேஷ் நகரை சேர்ந்தவர் பிச்சைமாரி மகன் சதீஸ்குமார் வயது 26/21, இவர் கொடுங்கையூரில் உள்ள அமுதம் நகரில் சொந்தமாக 407 வேன் ஒன்று வாங்கி மணல்,சல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜா கடந்த 12 ம் இறந்து விட்டதால் மேற்படி இறப்பு விசேசத்திற்காக அவனியாபுரம் வந்தார், இறப்பு விசேசம் முடிந்து தனது சித்தி மகன் சரவணக்குமாருடன், வள்ளானந்தபுரம் பைபாஸில் உள்ள ஒயின் ஷாப்பில் பீர் சாப்பிட்டு விட்டு வரும் போது அய்யனார் கோவில் தெரு, மதுரை மாநகராட்சி பள்ளி எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், இவர்களை வழி மறித்து , தகராறு செய்து அரிவாளால் வெட்டிய போது உடனிருந்த சித்தி மகன் அவர்களை தடுத்தார் ஆனால் அவர்கள் அவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளார்கள். உடனே உயிர் பயத்தில் அவர்கள் சத்தம் போடவும் அக்கம்பக்கத்தினர் ஓடி வர அவர்களை கண்ட ரவுடிகள் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினர், அதன்பிறகு காயம்பட்டவர்களை அவரது தங்கையின் கணவர் முகேஷ் அவர்கள் அருகில் உள்ள ஹர்சிதா மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையளித்தனர், மருத்துவ மனை மூலம் தகவல் அறிந்த அவனியாபுரம் V.2, காவல்நிலையத்தாரிடம் நடந்த சம்பவத்தை புகாராக அளித்தனர், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. பிரபு அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு, சேதுராமன் அவர்கள் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.
