
சிங்கம்புணரியில் போதை பொருள் கள்ள சாராய எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை சார்பில் போலி மதுபானம் மற்றும் போதை பொருட்கள், கள்ளச் சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சிங்கம்புணரி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இந்த போதை பொருள் விழிப் புணர்வு ஊர்வலத்தை சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி போதை பொருட்களை தமிழ் நாட்டில் வேரறுக்க மாணவ- மாணவிகளிடம் உறுதி மொழி எடுத்து விழிப்புணர்வு ஊர் வலம் நடைபெற்றது
