என்உயிர் என்தேச மக்கள் என்ற மனித உணர்வோடு மக்கள் உயிரை பாதுகாக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள்.
மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மனித உயிரைக் காக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வில் மாமல்லபுர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா. திரு.செல்வமூர்த்தி அவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கொரோனா பயமின்றி முககவசம் அணியாமல் வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் இலவசமாக முககவசம் வழங்கி சானிடைசர் கொடுத்து அன்பாகவும் மரியாதையாகவும் கொரோனா விழிப்புணர்வை பற்றி நல்ல அறிவுரைகளை வழங்கி வருகிறார்.அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த செலவில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் ,ஆட்டோ ஓட்டுனர்கள், தமிழ் நாடு அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆகிய அனைவரையும் ஒன்றினைத்து சமூக இடைவெளி விட்டு நிழலில் அமரவைத்து முதலில் ஒவ்வொருவருக்கும் பிஸ்கட் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்த பின்னர் ஒலிபெருக்கி மூலமாகவும் ,இசை மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும், சாலை விதிமுறைகளை பற்றியும் நல்ல நிகழ்வுகள் மூலமாக விளக்கி வருகிறார்.இந்த மாமல்லபுரம் ஒரு சுற்றுலா தலமாக விளங்குவதால் அங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் காரில் வருபவர்கள் அதிவேகமாக வருகின்றனர்.அவர்கள் உணரும் வகையில் தன்னுடைய அனுபவத்தை எடுத்து கூறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த குடும்பம் மட்டுமே உணர முடியும் அப்படிப்பட்ட உயிர் விபத்துக்குள்ளாகி அந்த குடும்பம் பொருளாதாரம் மற்றும் கணவரோ அண்ணணோ தம்பியோ யாராவது ஒருவர் இழக்கம்போது அந்த குடும்பம் படும் வேதனையை ஈடுகட்ட முடியாது என்பதை மிகவும் கண்டித்த வண்ணம் அறிவுரைகளை வழங்கி வருகிறார் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள். மாமல்லபுரம் போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டில் பூஞ்சேரி கிராம சந்திப்பில் அதிகமாக பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆகியோர் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்வதை பார்த்த திரு.செல்வமூர்த்தி அவர்கள் தடுப்பு சுவர் அமைத்து வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்ல வழிவகுத்தார்.அதுமட்டுமன்றி தன்னுடைய சொந்த செலவில் சாலையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு இலவச உணவும் தண்ணீரும் வழங்கி வருகிறார்.இப்படி சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் எந்நேரமும் உடல்வலி கால்வலி ஆகிய வலிகளோடும் தன்னுடைய குடும்பத்தையும் மறந்து பொதுமக்களுக்கு சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் மாமல்லபுரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா.திரு.செல்வமூர்த்தி அவர்கள் இவரை பற்றி அப்பகுதி வாழ் மக்கள் கடவுள் நேரில் வந்து உதவமாட்டார் இதுபோன்ற நன்மையான செயல்கள் செய்பவர்களும் கடவுளை போன்றவர்கள் என்று கூறி மகிழ்ச்சி அடைகின்றனர்.
