தேனி மாவட்டம், கம்பத்தில் செல் போன் கடையில் திருடிய வாலிபர் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் மொபைல் போன் கடையில் திருடிய வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் மணிநகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மொபைல் போன் கடை உள்ளது. வழக்கம் போல் கடை உரிமையாளர் நேற்றுமுன்தினம் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர் அங்கு மொபைல்போன் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ள கம்பம் தெற்கு காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் திருமதி லாவண்யா மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயகுமார் தலையிலான போலீசார் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சியின் உதவி மூலம் திருடனை தீவிரமாக தேடி வந்தனர்.
திருட்டு சம்பவம் தொடர்பாக சம்பவம் நடந்த அன்று மதியம் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டு ஓட முயற்சித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிஉள்ளார். தீவிர விசாரணைக்கு பிறகு பிடிபட்ட நபர் மணிநகரம் மொபைல் போன் கடையில் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் காமயகவுன்டன்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பிரதாப் வயது 19 எனவும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவன் மீது வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்,
