
காவல்துறையில், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) பதவிகளுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை. இப்பதவிகள் தலைமை காவலர் பதவியிலிருந்து நிலை உயர்த்தப்பட்ட பதவி. இவர்கள் தலைமை காவலர்களாகவே கருதப்படுவர். தலைமை காவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரமே எஸ்.எஸ்.ஐ.,க்கும் பொருந்தும்.
தலைமை காவலருக்கும், எஸ்.ஐ.,க்கும் உள்ள வேறுபாடே எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கு உள்ள அதிகார வேறுபாடாகும்.
எஸ்.ஐ., பொதுவாக காவல் நிலைய அதிகாரியாவார். பெரிய ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் காவல் நிலைய அதிகாரியாக இருப்பார்.
புலன் விசாரணை: முடிந்தளவு எஸ்.ஐ.,அந்தஸ்திற்கு கீழ் இல்லாதவர்கள் தான் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
தலைமை காவலர்: நிலைய அதிகாரி உத்தரவின் பேரில் பணி பார்க்க வேண்டும். அவர் இல்லாதபோது சிறுசிறு வழக்குகளை பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் 2 ஆயிரத்து 500 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்ளனர். இவர்கள் ஸ்டேஷன்களில் வழக்குபதிவு செய்ய நிலைய அதிகாரி (எஸ்.ஐ., அல்லது இன்ஸ்பெக்டர்) எழுத்துபூர்வமாக உத்தரவு தர வேண்டும். அவ்வாறு தராதவிட்டால் கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது வழக்கு தோற்று விடும். புகார் தந்த பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கும் எஸ்.ஐ.,க்கு இணையான அதிகாரம் வழங்க வேண்டும்
