Police Department News

வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I

வட இந்தியாவில் தொலைந்த மூதாட்டி தென் இந்தியாவில் தமிழகத்தில் நமது மதுரையில் மீட்கப்பட்டு மீண்டும் குடும்பத்தினருடன் பத்திரமாக முதியோர் இல்லத்தினரால் சேர்த்து வைக்கப்பட்டார். நன்றி திருப்பரங்குன்றம் போக்குவரத்து S.S.I

மத்திய பிரதேசம் இந்தோர் நகரில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவு வழிதவறி கடந்து வந்த பாட்டி ரெகமத் அலீனா (70) மதுரை திருநகரில் ஆதரவின்றி மிகவும் மோசமான தோற்றத்தில் சாலையில் அமர்ந்தபடி இருந்தார். இதை கண்ட குழந்தை நல ஆர்வலர் திருமதி மாரீஸ்வரி அவர்கள் நமது அடைக்கலம் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தார். நமது மீட்பு குழுவினர் திருநகர் காவல் நிலையத்தை அணுகி அந்த ஆதரவற்ற பாட்டியை மீட்டு 20.07.2021 அன்று இரவு அடைக்கலம் முதியோர் இல்லத்தில் சேர்த்து கொள்ளப்பட்டார். சம்பவ இடத்தில் பணியில் இருந்த போக்குவரத்து தலைமை சார்பு ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் மீட்பு பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.
ஹிந்தி மட்டுமே தெரிந்த பாட்டியிடம் தங்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதாக எடுத்து கூறி அழைத்து வந்தோம்.
பின் பாட்டியிடம் ஒவ்வொன்றாக விசாரித்து, அவரின் ஊர் மற்றும் குடம்பத்தினரின் தகவல்களை அறிய பெற்றோம்.
பின் திருநகரை சேர்ந்த பொறியாளர் திரு. ரவி அவர்களின் உதவியை நாடினோம். திரு. ரவி அவர்கள் கூகுள் உதவியுடன் அவர் மத்திய பிரதேசம் இந்தோர் நகரில் ஒரு தேனீர் கடையின் உரிமையாளர் எண்ணை தொடர்பு கொண்டு, பின் அவரின் மூலம் பத்திரிக்கையாளர் ஒருவர் முயற்சியால் மூதாட்டி குறிப்பிட்ட நூரி பள்ளிவாசல் அருகே விசாரிக்க செய்து அவரின் பேரன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின் அவரின் அலைபேசி மூலம், நம்மால் மீட்கப்பட்ட ரெகமத் அலீனா பாட்டியை உரையாட செய்தோம். பாட்டியின் குடும்பத்தை கண்டுபிடிக்க சிறப்பாக சிந்தித்து அதற்கு உதவிய திரு. ரவி அவர்களுக்கு எங்களின் மிகப்பெரிய அன்பும் நன்றியும். பாட்டியின் குடும்பத்தினர் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
பின் மத்திய பிரதேசத்தில் இருந்து மதுரைக்கு அவரின் பேரன் ஹைதர் அலி மற்றும் முகமது பெரோஸ் இன்று 05.08.2021 தொடர் வண்டியில் மதுரைக்கு நம் அடைக்கலம் முதியோர் இல்லத்திற்கு வந்தடைந்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் பாட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பே காணாமல் போனதாகவும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர், எப்போதும் வெளியில் சென்றால் வந்துவிடுவார். இது அவர் இரண்டாவது முறை காணாமல் சென்ற நிகழ்வு, ஆனால் இவ்வளவு தொலைவு அவர் வந்தது இதுவே முதல் முறை என்று கூறினர்.
பின் முறையான ஆவணங்கள் பெற்றுக்கொண்டு, திருநகர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் அழைத்து சென்றோம். பின் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, ஆய்வாளர் அவர்களால் விசாரிக்கப்பட்டனர்.
மூவரும் திரும்பி செல்ல மதுரை தொடர் வண்டி நிலையத்தில் மதுரை – பெக்கானர் AC த்ரீ டயர் தொடர்வண்டியில் பாதுகாப்பாக அமர்த்தி வழியனுப்பினோம். (குறிப்பு : ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளது என்பதாலும், இன்று 05.08.2021 மத்திய பிரதேசம் செல்ல சாதாரண கட்டண ரயில் சேவை இல்லாததால், விலை உயர்ந்த AC பெட்டியில் ரூ6675/. மூன்று நபருக்கு பயணக்கட்டனம் நமது அறக்கட்டளை சார்பில் செலுத்தப்பட்டது).
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.