மதுரை, தனக்கன்குளம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் மூவர் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, திருநகர், W 1, காவல்நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 7 ம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் முதல்நிலை காவலர் சக்திகுமார், சதீஷ்ராஜா, ஆகியோர் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார் அந்த நேரம் தனக்கன்குளம், அய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காவலர்களை கண்டதும் தப்பியோட எத்தனித்த நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது அவர்கள் உசிலம்பட்டி, முண்டுவேலன்பட்டி, தெற்கு காலனியை சேர்ந்த மூக்கையா மகன் ரமேஷ் வயது 45/21, ஆரப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த லெக்ஷமணன் மகன் சுந்தர் வயது 32/21, அதே பகுதியை சேர்ந்த வேளாளர் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் முருகன் வயது 52/21, தனக்கன்குளம், நேதாஜி நகரை சேர்ந்த அம்மாசி தேவர் மகன் சுரேஷ் வயது 42/21, என தெரிய வந்தது. அவர்களை சோதனையிட்டதில் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா 2 கிலோவும் கஞ்சா விற்று வைதிருந்த ரூபாய் 25 ஆயிரமும், வைத்திருந்தனர் அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.