
மதுரையில் அக்காளின் கடை வாடிக்கையாளரை அழைத்து வியாபாரம் செய்த தங்கை, தட்டிக்கேட்ட அக்காளுக்கு அடி உதை, விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை, நெல்பேட்டை, சுங்கம்பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் மருதமுத்து மனைவி பாண்டியம்மாள் வயது 58/21, இவர் நேரு அரிசி கடை முன்பு பிளாட்பாரத்தில் வைத்து கோழி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8 ம் தேதி காலை சுமார் 8 மணியளவில் இவரது கடைக்கு அருகே கோழி வியாபாரம் செய்து வரும் இவரது தங்கை நாகம்மாள் இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளரை கூப்பிட்டு வியாபாரம் செய்துள்ளார், எதற்காக என் கடைக்கு வந்த வாடிக்கையாளரை கூப்பிட்டு நீ வியாபாரம் செய்கிறாய் என்று கேட்டதற்கு நாகம்மாள் தன் அக்காள் பாண்டியம்மாளை அசிங்கமாக திட்டியும் கைகளால் அடித்தும் காதில் அணிந்திருந்த தோடை கைகளால் இழுத்து இரத்த காயத்தை ஏற்படுத்தியும் கை நகங்களால் பரண்டி ரத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளார், உடனே பாதிக்கப்பட்ட பாண்டியம்மாள் விளக்குத்தூண் B1, காவல்நிலையத்தில் புகார் செய்தார் புகாரை பெற்றுக்கொண்ட சார்பு ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் நாகம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
