பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்து
நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்க்கு சென்று சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்,
விபத்தும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சுகாதாரமாகவும் சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றவர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் தாய் சேய் நலத்திட்டமான தாய் திட்டத்தினை ஆய்வு செய்து மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும்
கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
மற்றும் செவிலியர்களின் கோரிக்கையான குடியிருப்பு வளாகம் அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக நலப்பணிகள் மாவட்ட இனை இயக்குநர் டாக்டர் .சாந்தி,
பாலக்கோடு அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.