மதுரை, நேதாஜி ரோடு பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற நான்கு பேர் கைது, ஒருவர் தலைமறைவு, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை
மதுரை, திடீர் நகர் C 1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.
C.பணராஜ் அவர்கள் கடந்த 10 ம் தேதி மதியம் ஒரு மணியளவில் சக காவலர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்துப் பணியில் இருந்த போது, நேதாஜி ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்படுள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த சிலர் காவலர்களை பார்த்ததும் தப்பி ஓடினர், ஓடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் அவர்கள அவணியாபுரம் பகுதியை சேர்ந்த வித்தியாபூர்ணாச்சாரி மகன் கார்த்தியகேயன் வயது 51/21, செல்லூரை சேர்ந்த கண்ணய்யா மகன் ஜோதிபாசு வயது 50/21,செல்லூரை சேர்ந்த பாபு மகன் ராஜசேகர் வயது 46/21, முனிச்சாலையை சேர்ந்த கனேசன் மகன் ரவி வயது 51/21, என தெரிய வந்தது.
இவர்களுக்கு தலைமையாக செயல்பட்ட அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தப்பி ஓடி விட்டார் மற்ற நால்வரையும், பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வெளிமாநில லாட்டரி சீட்டுக்களின் வரிசை எண்களை ஆன் லைன் மூலமாக வாங்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் மேலும் அந்த லாட்டரி சீட்டுக்களின் வரிசை எண்களில் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போலியாக வரிசை எண்களை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததை ஒத்துக் கொண்டதை தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளின் வரிசை எண் உள்ள ஆவணங்களை மற்றும் பணத்தையும் கைபற்றி, அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் விசாரணை நடத்தி அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி அன்நால்வரையும் சிறையில்அடைத்தனர்.