அம்பாசமுத்திரத்திரம் ஒன்றியம் ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா விபரம் கேட்டு சேர்மாதேவி சப்கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
இலவச வீட்டுமனை பட்டா வரைபடம் விபரம் கேட்டு சேரன்மாதேவி சப் கலெக்டரிடம் அம்பை பகுதி பொது மக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது;
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சுமார் 96 பயனாளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அரசு மூலமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட அந்த இலவச வீட்டுமனை பட்டாவில் இடத்திற்கான வரைபடமும், விபர பட்டியலும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை பார்த்து இறுதி செய்ய வரைபடம் இல்லை, மேலும் பயணாளிகளின் விபரப் பட்டியலும் பட்டாவில் இல்லை எனவே அதனை முறையாக அளந்து காட்டி கொடுக்கும்படி பலமுறை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் வீட்டுமனை பட்டா பெற்றவர்கள் நேற்று சேரன்மகாதேவி சப் கலெக்டர் சிவ கிருஷ்ண மூர்த்தி அவர்களிடம் இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர்.
.