சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்புகளை தீவிரப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தென்காசி மாவட்டம், நாளை 15/08/2021 தேதி 75ஆவது சுதந்திர தினவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்கள் தீவிரப்படுத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து மேக்கரையில் இருந்து கேரளா பார்டர் வரை நக்சல் தடுப்பு படையின் பணியை நேரில் சென்று அறிவுரைகள் வழங்கி தீவிரப்படுத்தினார், மேலும் புளியரை சோதனை சாவடி,காசி விஸ்வநாதர் கோவில் போன்ற மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள் சரியாக உள்ளதா என திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
