பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல்நிலையங்களில் கஞ்சா மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகளான 1)உதயா (19) த/பெ.சரவணன், வெட்சிபூ தெரு, போந்தூர் கிராமம் 2) விஜய் 22 ) த/பெ.வரதராஜ் , செம்பருத்தி பூ தெரு, போந்தூர் கிராமம், திருப்பெரும்புதூர், 3)அசோக் (எ) இரத்தினகுமார் (22) த/பெ.சிவராஜ் கிளாய் கிராமம். திருப்பெரும்புதூர், 4) சரண்ராஜ் (26) த/பெ.துரை செம்பருத்தி பூ போந்தூர் கிராமம், திருப்பெரும்புதூர், 5) விஜயகாந்த் (27) த/பெ.ஏழுமலை, கச்சிப்பட்டு கிராமம், திருப்பெரும்புதூர். 6) பெருமாள் (32) த/பெ.தாந்தோணி, சந்தவேலூர் கிராமம், திருப்பெரும்புதூர், 7) சதீஷ் (28) த/பெ.செங்கல்வராயன், எல்லையம்மன்கோயில் தெரு, கீழ்பொடவூர் கிராமம், 8) ஆனந்தன் (37) த பெஏழுமலை, பொன்னியம்மன் தெரு, கோயில் தெரு , திருமங்கலம் 9)தனசேகர் (28) த/பெ.அல்லிமுத்து, சிறுமாங்காடு மற்றும் ஆகியோர்கள் மீது பிரிவு 110 கு.வி.மு.ச – ன்படியும் மற்றும் 10) நாகராஜ் (38) த/பெ.குமார், திருவீதியம்மன் கோயில் தெரு, கிளாய் கிராமம், திருநாவுக்கரசு (26) த/பெ.முனுசாமி, நடுத்தெரு, கச்சிப்பட்டு, திருபெரும்புதூர் (12) பாலா (எ) பாலமுருகன் ( 26 ) த/பெ.சம்பத், திருவீதியம்மன் கோயில் தெரு, கிளாய் கிராமம் ஆகியோர்கள் மீது பிரிவு 100 கு.வி.மு.ச – ன்படியும் திருப்பெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத் காவல்நிலைய காவல் ஆய்வாளர்களின் வேண்டுகோளின்படி வருவாய் கோட்டாட்சியர் திருப்பெரும்புதூர் அவர்கள் மேற்படி நபர்களை ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளார்.