
இளையான்குடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விப்புணர்வு..!!
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.செந்தில் குமார் அவர்களின் அறிவுரைகளின் படி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜான் கென்னடி மற்றும் SI பார்த்திபன்
இளையான்குடி தச்சனந்தலில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதில் நின்று பொது மக்களிடம் சாலை விழிப்புணர்வு செய்தனர்.
சாலை விபத்துகள் எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதே இதற்குப் பல காரணங்களை சொல்லலாம் .
சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமை வாகன ஓட்டிகளிடம் பொறுப்புணர்வு இல்லாமை , கவனச் சிதறல் , விதிமுறைகளை கடைப்பிடிக்காதிருத்தல் , வாகனங்கள் பற்றி அறியாமை , அவசரம் , அலட்சியம் , மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைச் சொல்லலாம் . வாகனங்களால் , அதாவது , வாகன ஓட்டிகளால் நிகழும் விபத்துகளைப் போலவே , சாலைகளின் மோசமான நிலையாலும் பல சமயங்களில் விபத்துகள் நிகழ்வதுண்டு . நெடுஞ்சாலைகளிலும் நகர்ப்புறச் சாலைகளிலும் உரிய பாதுகாப்பு , எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள் அமைக்கப்படாததும் விபத்துக்கு காரணமாகிறது என்று அறிவுரை வழங்கினர்.
காவலர் ரேவதி, பாலா சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
