
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ரேஷன் அரிசி 32 மூடைகள் கடத்தியவர்களை அதிரடியாக கைது செய்த தனிப்படையினர்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.பாஸ்கர் அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நேற்று 22 ம் தேதி ரேஷன் அரிசி கடத்தல் பற்றி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படையினர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கோட்டையை சேர்ந்த பாண்டியராஜன் மகன் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கீழக்கோட்டையில் உள்ள ஜெயபாண்டி ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 மூடைகள் சுமார் 1550 கிலோ ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்துள்ளனர்.எதிரி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
