
கடலூர் அருகே ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி பழைய மேட்டுக் குப்பத்தை சேர்ந்தவர் திருமலை முருகன் (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் திருமலை முருகன் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்திருந்தது.
அதிலிருந்த 3 1/4 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு சுமார் 1.50 லட்ச மாகும். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீஸ் நிலை யத்தில் திருமலை முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
