செயின் பறிப்பு குற்றவாளிகளை, விரட்டிப் பிடித்த மதிச்சியம் போலீசார்
மதுரை, அண்ணாநகர் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் அவர்கள், மற்றும் மதிச்சியம் E1, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சாதுரமேஷ் அவர்களின் உத்தரவின்படி குற்றத்தடுப்பு நடவடிக்கையாக மதிச்சியம் பகுதியில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் மற்றும் Gr 1, காவலர் மன்மதன் 3812, AR Pc ராஜசேகர் 3163, ஆகியோர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அந்த சமயம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காவலர்களை கண்டதும் வண்டியை போட்டு விட்டு ஓட ஆரம்பித்தனர், ஆனால் சுதாரித்து கொண்ட காவலர்கள் அவர்களை விரட்டிப் பிடித்தனர், அவர்களை விசாரித்த போது அவர்கள் திருப்பவனம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த புஷ்வனேஸ்வரன் மகன் ஹரிஹரன் வயது 22/21, மற்றும் அனுப்பானடி ஹவுசிங் போர்ட் காலனியை சேர்ந்த திருமூர்த்தி மகன் சபரி என்ற பிரேமேஸ்வரன் வயது 23/21 என தெரிய வந்தது, இவர்கள் அவணியாபுரம் பகுதியில் செண்பகவள்ளி என்ற பெண்ணிடம் செயின் வழி பறி செய்தவர்கள். மேலும் இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து திருட்டு பைக் ஒன்றும் 8 சவரன் தங்க நகை, செல் போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர் இவர்களை நிலையம் அழைத்து சென்று இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு நீதிபதி அவர்களின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
