Police Department News

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம்

12 கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்கள் தமிழக அரசு நியமனம்

மதுரை சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ் நாடு அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அரசு தலைமை வழக்கறிஞராக. ஆர்.சண்முகசுந்தரம் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ,திரு. அசன் முகமது ஜின்னா ஆகியோரை கடந்த மே மாதம் பொறுப்பேற்ற தமிழ் நாடு அரசு நியமித்தது அதற்கு பிறகு தற்காலிக அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டோரை நியமித்துள்ளது இந்த நிலையில் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராவதற்காக அடிசனல் ,பி.பி.என்று சொல்லக் கூடிய கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக,12 நபர்களை நியமித்து ,தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் , வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார் அதன்படி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆஜராக ,எம்.பாபு முத்துமீரான் கஸ்தூரி ரவிச்சந்திரன் மற்றும் ஆர்.முனியராஜ் ஏ.கோகுலகிருஷ்ணன் ஏ.தாமோதரன் இ.ராஜ்திலக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் அதே போல மதுரை கிளை வழக்குகளில் ஆஜராக கூடுதல் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக எஸ்.ரவி இ.அந்தோனி சகாயபிரபாகர் ஆர்.எம்.எஸ்.சேதுராமன் ஆர்.மீனாட்சிசுந்தரம் ஏ.திருவடிகுமார் டி.செந்தில்குமார் ஆகியோரை நியமித்தும், உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.