
மதுரை அனுப்பானடி பகுதியில் அரிவாளுடன் சூற்றித் திரிந்த இளைஞரிடம் கஞ்சா பறிமுதல்
மதுரை மாநகர் கீரைத்துறை B4, காவல் நிலைய ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்கள் மற்றும் முதல் நிலை காவலர்கள் M.பாண்டி, செந்தில்குமார், ஆகியோர் கடந்த 19 ம் தேதி காலை 9.30 மணியளவில், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்,
மதுரை அனுப்பானடி பகுதியில் ரோந்து செய்து, பொன்னுப்பிள்ளை தோப்பு சுடுகாடு அருகே வரும்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட எத்தனித்தான் சுதாரித்துக் கொண்ட காவலர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து விசரித்த போது அவன் அனுப்பானடி கிருஷ்த்தவ தெருவை சேர்ந்த செந்தில் மகன் கண்ணன் என்ற சைக்கோ கண்ணன் வயது 22/21, என தெரிய வந்தது. அவன் ஓட முயற்சித்த காரணத்தை கேட்ட போது அவன் முதுகுக்குப் பின் ஒரு பெரிய வாளும் இரண்டு கஞ்சா பொட்டலமும் வைத்திருப்பது தெரிய வந்தது, உடனே அவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
