

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட நொரம்பு மண் கடத்திய லாரி பறிமுதல்.
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு எட்டிமரத்துப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி நுரம்பு மண்ணை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் டிப்பர் லாரியையும், நுரம்பு மண்ணையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த முத்து கவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த டிரைவர் முத்து உடன் வந்த எட்டிமரத்துபட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
