
நமது தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள்காவல் துறை அதிகாரி என்ற நிலையைத் தாண்டி இன்றைய இளைஞர்களின் அறியாமையை நினைத்து கலங்கி நின்ற தருணங்கள் ஏராளம்
ஒரு சமயம், அவள் ஒரு பள்ளிக்கூடச் சிறுமி. பத்தாவது முடித்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவி என்றாலும் அவள் சிறுமிதான். ஒருநாள் அதிகாலையில் அந்தப் பெண்பிள்ளையைக் காணவில்லை. பெற்றோருக்கும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. விசாரித்தபோதுதான் 28 வயது வேன் டிரைவரோடு ஓடிப் போய்விட்டாள் என்பது தெரிய வந்தது. இத்தனைக்கும் அந்த வேன் டிரைவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருவருடைய மொபைல் போன்களும் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றன.
பசி மறந்து தூக்கம் தொலைத்து தவிக்கும் அந்தப் பெற்றோரைப் பார்க்கும்போது கண்களில் நீர் கசிகிறது. பதினாறு வயது என்பது திருமணத்துக்கான வயதா… படிக்கும் வயதில் பாடத்தைத் தொலைப்பது மட்டுமல்லாமல் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு எங்கோ தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை நினைக்கும்போது இளைய சமூகத்தின் மீது கோபம் வருகிறது.காவல்துறை மூலம் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி என்பது உறுதிதான் ஆனால் , பெற்றோரின் கண்ணீரைச் சந்திக்க கலக்கமாக இருக்கிறதே! படிக்கும் வயதில் தன் வாழ்க்கையை தொலைத்து வீட்டு தன் பெற்றோரையும் வேதனைப்படுத்துவது ஏன் இளைஞர்களே சற்று சிந்தியுங்கள்
