மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக கண்டுபித்து கைது செய்த காவல்துனையினர்
மதுரை மாநகரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான மற்றும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக செப்டம்பர் மாதம் நடைபெற்ற 19 செயின் பறிப்பு குற்றங்களில் 15 வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11 லட்சம் மதிப்புள்ள 31 பவுன் நகைகள் மற்றும் 7 இருசக்கர வாகனங்கள் கைபற்றப்பட்டு எதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
W1, திருநகர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளி ரமேஷ் என்ற சிங்கத்தேவன் சம்பவம் நடைபெற்ற ஓரிரு தினங்களில் கைது செய்யப்பட்டு அவரிடமிருப்து வழிப்பறி செய்யப்பட்ட தங்கநகைகள் மீட்கப்பட்டு எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.
V2, அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு இடங்களில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் அபினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட தங்க நகைகள் மீட்க்கப்பட்டு எதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
V2, அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பூரணியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஹரிகரன் மற்றும் சபரி ஆகியோர்கள் மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து ஆயுதம் தாங்கிய காவலர்களால் வாகன தணிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். மேலும் எதிரிகளிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட நகையினை கைப்பற்றி எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
E3, அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் செயின் வழிப்பறியில் ஈடுபட்ட பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் ராஜசேகரன், ஆனந்தகுமார், வீரபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு வழிப்பறி செய்த நகைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்,
E2, மதிச்சியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் நகை வழிப்பறி செய்த பூங்கொடி, மற்றும் நந்தினி ஆகிய எதிரிகள் சம்பவ நடந்த சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட எதிரிகளை கண்டறிந்து துரிதமாக கைது செய்தமைக்காக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேற்படி குற்ற சம்பவங்களில் எதிகளை அடையாளம் காண சிசிடிவி கேமராக்களின் பதிவுகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. எனவே பொதுமக்கள் சிசிடிவிகேமராக்களை அவசியம் கருதி தங்களது பகுதிகளில் பொருத்த முன் வர வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை ஆணையர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
