மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு புதுக் கட்டிடம்
மதுரை, மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு 1.15 கோடியில் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்காக வடக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளான் மண் பரிசோதனை மைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. உயர் நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின்படி மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கென தீயணைப்பு நிலையம் உருவாக்கப்பட்டு மேலச் சித்திரை வீதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தில் தற்காலிகமாக அலுவலகம் ஒதுக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிலையில் மேற்படி தீயணைப்பு நிலையத்திற்கு முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் 12 சென்டில் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக மண பரிசோதனை கட்டிடத்தை இடிக்கும் பணி 1.62 லட்சத்தில் தற்போது நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள் இப்பணி முடிந்ததும் கட்டுமோனப்பணிக்கான டென்டர் விடப்படும்.