திருச்சி மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு
திருச்சி மாநகர காவல் ஆணையர் பு.கார்த்திகேயன், 12.10.2021-ம் தேதி காலை திருச்சி மாநகரம், கே.கே.நகரில் உள்ள காவலர் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், Dog Squad, நூலகம்ஸெ ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், Dog Squad -ல் வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் நாய்களை சிறப்பாக தயார் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும் காவல் வாகனங்கள் குறித்த பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பெட்ரோல் பங்கின் உரிமத்தினை உரிய காலத்தில் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தீப்பற்றாத வண்ணம் எல்லா விதமான முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும் என்றும், உரிய தீ தடுப்பு உபகரணங்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
திருச்சி மாநகர ஆயுதப்படையில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் நுஊபு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை காவலர்களின் நலன் கருதி ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நூலகத்தை ஆய்வு செய்தபோது, அனைவரிடமும் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், சந்தாதாரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள், தானும் ஒரு சந்தாதாரராக பதிவு செய்து கொண்டு நூலகத்தை நல்ல முறையில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
