
தமிழக காவல் துறையில் மொத்த் 13,406 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பணியில் உள்ள காவலர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது.
காவல் துறைக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் டி.பி.எஸ்., (தமிழ்நாடு போலீஸ் சர்வீஸ்) அதிகாரிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர்
தற்போது தமிழகத்தில் 14 டி.ஜி.பி., கள் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி.,கள் 17 பேர் உள்ளனர். உயரதிகாரிகளின் பணியிடங்கள் பெரும்பாலும் உடனுக்குடன் நிரப்படுகிறது, அதே சமயம் எஸ்.ஐ., முதல் கான்ஸ்டபில் வரையிலான பணியிடங்கள் ஆண்டுதோறும் பற்றாகுறையாகவே உள்ளன.
2021 ஜூலை கணக்கெடுப்பின்படி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணியில் உள்ள போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமையுடன் மன அழுத்தமும் ஏற்படுகிறது. வார விடுமுறை எடுக்க போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுமதித்துள்ள நிலையில் ஆள் பற்றாகுறையால் விடுமுறை எடுக்க அனுமதிப்பதே இல்லை, என்பதே உண்மை. போலீசார் நலன் கருதி உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
