Police Department News

மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை

மதுரை மாநகரில், தேவர் ஜெயந்தியின் போது சட்ட விதிகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் எடுத்த கடும் நடவடிக்கை

மதுரைமநகரில் நடைபெற்ற தேவர் ஜெயந்திவிழா கொண்டாட்டத்தின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதிவேகமாகவும் அதிக ஒலி எழுப்பியும் ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கர வாகனங்கள், மற்றும் 13 நான்கு சக்கர வாகனங்கள் மீது 13 இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள் நான்கு 75 MCP வழக்குகள் மற்றும் 62 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகள் உள்பட மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 23 நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் மேலும் சட்ட விதிமீறல் குற்றங்களுக்காக ரூபாய் 1,36,600/− அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்த்து இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 14 வாகன ஓட்டிகள் மீது மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் இ சலான் மூலம் 38 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 16,400/− அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகர பொக்குவரத்து காவல்துறையினரால் மோட்டார் வாகன விதிகளை மீறிய 150 இரு சக்கர வாகனங்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவ்வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது இ சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது அரசு வாகனங்களை சேதப்படுத்தியதற்காக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட எதிரிகள் ட்ரோன் கேமரா பதிவுகள் போலீஸ் ஒளிப்பதிவுகள் மற்றும் சிசிடீவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்படி எதிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.