
திருச்சியில் காவலர்களுக்கு நேரில் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று குற்றச் சம்பவங்கள் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் நிம்மதியாக கொண்டாட தங்கள் குடும்பத்தினர் மறந்து பண்டிகை காலங்களில் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முசிரி, துறையூர், பெட்டவாய்த்தலை, ஜீயபுரம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியில் இருந்த காவலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
