பிரபல நகைகொள்ளையர்கள் அடையாறு மாவட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.நெல்சன் உத்தரவில் J2சட்டம் ஒழுங்கு மற்றும் J5 குற்றப்பிரிவு ஆய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்கள்.
J2.Cr.no:261/2021 U/S 457,380 IPC, D.O :31-10-21 வழக்கில் திரு நெல்சன்,(உதவி ஆணையாளர், அடையாறு ) அவர்களின் உத்தரவுப்படி , திருமதி. ராஜேஸ்வரி, ( ஆய்வாளர்,குற்றப்பிரிவ, அடையாறு), திரு.மீனாட்சி சுந்தரம் ( சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்,அடையாறு), திரு ராஜாராம் ( ஆய்வாளர், குற்றப்பிரிவு , j5 சாஸ்திரி நகர் ) ஆகியோர்களின் மேற்பார்வையில் தலைமைக் காவலர் திரு சுப்பிரமணி, முதல் நிலை காவலர் . மகேஷ்வரன் பிள்ளை, முதல் நிலை காவலர் பன்னீர் ராஜகுமார் ஆகியோர்கள் சிறந்த முறையில் புலனாய்வு செய்து . ஏ1. ரவி பாபு த/ப மாலை கொண்டான் , ஏ2 . ஜக்குபாய் க/ப சீனிவாசன் ஆகியோரை கைது செய்து வழக்கில் காணாமல்போன 61 அரை சவரன் நகைகளை கண்டுபிடித்து ,பின் கைதிகளை சிறையில் அடைக்கப்பட்டது.