
27.08.2022
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு .சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் தீவிர போதை தடுப்பு நடவடிக்கையால் சென்னையில் போதை பொருள் சப்ளையர் இருவர் கைது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் இ .கா .ப அவர்கள் சென்னை பெருநகர் முழுவதும் தீவிர போதை ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா இ.கா.ப அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை ஆணையாளர் திரு.நரேந்தின் நாயர் இ.கா.ப அவர்களின் அறிவுரைகளின் பேரில் அடையாறு துணை ஆணையாளர் திரு .மகேந்திரன் இ.கா.ப அவர்கள் அனைத்து சரக உதவி ஆணையாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைத்து தீவிர போதை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று 27. 08.2022-ம் தேதி குட்கா மற்றும் புகையிலை பொருட்களை அடையாறு பகுதியில் ரகசியமாக சப்ளை செய்யும் நபர்களை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் படி அடையாறு சரக உதவி ஆணையாளர் திரு நெல்சன் மற்றும் அடையாறு காவல் ஆய்வாளர் திரு .ராமசுந்தரம் அவர்களின் தனிப்படையினர் காலை சுமார் 6 .15 மணியளவில் அடையாறு காந்தி நகர் 4 வது மெயின் ரோடு பகுதியில் கண்காணித்துக் கொண்டு இருந்தபோது TN07 CD 4207 மாருதி சுசுகி ஸ்விப்ட் காரில் வந்த இரண்டு சந்தேக நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் கொடுங்கையூரை சேர்ந்த வரதராஜன் மற்றும் அவரது உறவினர் சஞ்சய் கண்ணா என்பதும் மேலும் அவர்கள் வந்த காரை சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கைது செய்து விசாரணை செய்த போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்னை விசாரணையில் அவர் தனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் என்றும் பெங்களூரில் இருந்து காய்கறி வண்டிகளில் அவ்வப்போது மொத்தமாக கொள்முதல் செய்து தனக்குத் தெரிந்த கடைகள் மற்றும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது அவர்களிடமிருந்து 127 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் உட்கா பொருட்கள் அவற்றை சப்ளை செய்ய பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளியை கைது செய்த அடையாறு சரக உதவி ஆணையாளர் திரு .நெல்சன் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் திரு. ராமசுந்தரம் மற்றும் தனிப்படை காவலர்கள் திரு .சுப்பிரமணி திரு .பன்னீர் ராஜ்குமார் திரு .மகேஸ்வரன் பிள்ளை திரு .சிங்காரவேலன் ஆகியோர்களை உயர் காவல் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
