
சென்னை, சூளையைச் சேர்ந்த ரஞ்சித், வ/42 என்பவர் அவரது மனைவி மற்றும் தங்கையுடன் TN 04 AM 4609 என்ற பதிவெண் கொண்ட Hyndai Grand I 10 காரில் நேற்று 18.11.2019 இரவு சுமார் 07.40 மணியளவில் F2 எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் இடது பக்க முகப்பில் தீப்பற்றி எரிவதை கண்ட கார் ஓட்டுநர் மூல்சிங் காரை நடு ரோட்டில் நிறுத்தி அனைவரையும் இறங்கிவிட்டு தீயை அணைக்க முடியாமல் தவித்துவந்தவர்களுக்கு, பணிமுடித்து அவ்வழியே வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் கார் தீப்பற்றி எரிவதை கண்டவுடன் விரைந்து செயல்பட்டு, அவ்வழியே கோயம்பேடு நோக்கி சென்றுகொண்டிருந்த வெளியூர் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தி, பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்து வந்து கார் மீது செலுத்தி தீயை அணைத்தார். இதனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமலும், கார் முழுவதும் எரிந்து சேதமடையாமலும் தடுக்கப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு சாலையில் தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்த ஆயுதப்படை காவலர் C.காரணீஸ்வரன் (கா.51930) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 19.11.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.