Police Department News

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரக் காவல் துறையானது பயனுள்ள. மற்றும் பொது மக்களுக்கு நட்பான காவல் துறையாக விளங்கி மேம்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும், சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நகரத்தில் அமைதியான. சூழலை உறுதி செய்துள்ளது

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்ஙகளிலும் உள்ள 1550 சரித்திர பதிவேடு ரவுடிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்

இவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1204 ரவுடிகளில் போதைப்பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 45 ரவுடிகளும்,பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த 62 ரவுடிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் மேலும் 110 CrPc பிரிவின் கீழ் 792 வழக்கமான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது அவர்களில் 569 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது பிணைப்பத்திர நிபந்தனைகளை மீறிய 66 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதி மன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ரவுடிகளுக்கு எதிரான கடுமையான மற்றும் வலுவான நடவடிக்கையின் விளைவாக 2021 ஆம் ஆண்டில் பதிவான 35 கொலைகளில் ரவுடிகளுக்கு இடையேயான பழி வாங்கும் கொலையோ அல்லது இனவாதக் கொலையோ நடக்கவில்லை குடும்ப தகராறுகள் சுற்றுப்புறங்களில் சிறு சண்டைகள் மற்றும் தெரிந்த நபர்களுக்குள் பிற தகராறுகள் ஆகிய காரணங்களினால் மட்டுமே கொலைக் குற்றங்கள் நடந்துள்ளன 2019 ஆம் ஆண்டில் பதிவான 42 கொலை வழக்குகளில் 5 பழி வாங்கும் கொலைகளும் 4 ரவுடி கொலைகளும் நடந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில் பதிவான 37 கொலை வழக்குகளில் 3 பழி வாங்கும் கொலைகளும் 2 ரவுடி கொலைகளும் நடந்துள்ளன.

2021 ஆம் ஆண்டில் மதுரை மாநகர காவல் துறை திறம்பட எடுத்த நடவடிக்கையினால் ஆதாயத்திற்காக எந்த கொலையும் பதிவாகவில்லை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 2 மற்றும் 3 ஆதாய கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டில் பதிவான 733 வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் 3.5 கோடி அளவுக்கு சொத்துக்கள் இழப்புகள் ஏற்பட்டது. அதில் 481 வழக்குகளை விரைவாக கண்டறிந்து ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்க்கப்பட்டன.மேலும் 145 பெரும் குற்ற வழக்குகளில் 1.6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இழப்பு ஏற்பட்டது அதில் 117 வழக்குகள் கண்டறியப்பட்டு ரூ. 90 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ள.

2021 ஆம் ஆண்டில் திருடப்பட்டு காணாமல் போன 179 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 500 மொபைல் போன்கள் கண்டறியப்பட்டு பறி முதல் செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2021 ஆண்டில் 587 போதைப் பொருள் கஞ்சா விற்பனையாளர்கள் மீது NDPS சட்டத்தின் கீழ் 338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது ஆதே போல தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 543 விற்பனையாளர்கள் மீது COTPA சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 லட்சம் மதிப்புள்ள 6500 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் IMFL மது பானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததற்காகவும் வைத்திருந்ததற்காகவும் TNP Act ன் கீழ் 2980 பேர் கைது செய்யப்பட்டு ரூ. 72 லட்சம் மதிப்புள்ள 5700 லிட்டர் மது பானம் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றச் செயல்களை தடுப்பதற்காக, குற்றச் செயல்களில் வழக்கமாக ஈடுபடும் 2465 நபர்களுக்கு எதிராக பிரிவு 107, 109, மற்றும் 110 CrPc இன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு 2013 நபர்களிடம் நன்னடத்தை பத்திரம் பெறப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டன. அவர்களில் 146 பேர் பத்திர நிபந்தனைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும் 2021 ஆம் ஆண்டில் 81 ரவுடிகள் குண்டர் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

போக்குவரத்தை சீராக இயக்கவும் சாலை விபத்துகாளில் உயிரிழப்பை தடுக்கவும் போக்கு வரத்து விதிகளை மீறுபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பல் வேறு பிரிவுகளின் கீழ் 9,16,639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.6,45,29,600/- அபராதம் விதிக்கப்பட்டது.

2021 ஆம் வருடத்தில் மாநகர காவல் துறை மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி காவல் பணியை மிகவும் திறம்பட செய்தது.தெருக்களில் காவல் துறை ரோந்தை அதிகரிக்க இ பீட் மொபைல் பயன்பாடு பயன்படுத்தப்பட்டது. சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகளை மொபைல் போன்கள் மூலம் அடையாளம் காண Face recognition application காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது சுமார் 100 ரோந்து காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்கள் வழங்கப்பட்டன. நகர எல்லைகளில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும் ரவுடி கும்பல்களை கண்காணித்து விரைவான நடவடிக்கை எடுப்பதற்காக 16 ஆயுதம் ஏந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளர்.

மதுரை மாநகர காவல்துறை நகரின் 2500 முக்கிய சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 11,500 சிசி டிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்து நகரம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது குற்றச் சம்பவங்களை தடுக்கவும் போக்கு வரத்தை திறம்பட ஒழுங்குபடுத்தவும் மாநகர காவல் துறைக்கு இந்த கேமராக்கள் பெரும் உதவியாக இருப்பதால் பொது மக்கள் தங்களுடைய குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்களை அதிக அளவில் பொருத்த வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் குடி போதையில் வாகங்களை ஓட்டுவதை தவிர்த்து விட்டு புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.