மதுரையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நரிமேட்டை சேர்ந்த வாலிபர் தனிப்படை போலீசாரால் கைது
மதுரை மாநகரில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நகை திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்களை பிடிப்பதற்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்னஹா அவர்களின் உத்தரவின்படி காவல் துணை ஆணையர் தெற்கு மதுரை மாநகர் திரு. தங்கத்துரை அவர்களின் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் திரு. ரவீந்திரபிரசாத் அவர்கள் திடீர்நகர் சரகம் அவர்களின் கண்காணிப்பில் காவல் ஆய்வாளர் குற்றப்பிரிவு C2, சுப்ரமணியபுரம் காவல் நிலையம் திருமதி. சங்கீதா அவர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடி வந்த நிலையில் மதுரை நரிமேட்டை சேர்ந்த சையதுஅலி வயது 35/2022, த/பெ.சேக் தாவூத் என்பவர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்து ரகசிய தகவல் மூலம் மேற்படி சையதுஅலி என்பவரை பிடித்து மேற் கொண்ட விசாரணையில் அவர் மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் காவல் நிலையம் தெற்கு வாசல் காவல் நிலையம் திருப்பரங்குன்றம் காவல் நிலையம் திருநகர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் ஈரோடு சிவகங்கை மாவட்டங்களிலும் வீட்டை உடைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி எதிரி கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து மேற்படி வழக்குகளில் திருடப்பட்ட சுமார் 25 பவுன் தங்க நகைகளும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது இந்த துரித நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட அதிகாரிகள் மற்றும் காவலர்களை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
