
திருடப்பட்ட சரக்கு வாகனத்தை ஜி.பி.எஸ்., கருவியின் மூலம் விரைந்து மீட்ட மதுரை மாநகர காவல் துறையினர்
மதுரை மாநகர் சி.எம்.ஆர் ரோடு சின்ன கண்மாய் தெருவை சேர்ந்த மீனாசிசுந்தரம் மகன் பிரவின்குமார் வயது 31.இவர் கடந்த 12 ம் தேதியன்று ( 12/04/25 ) இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை மதுரை காமராஜர் சாலையில் உள்ள செல்லையா நாடார் பாத்திரக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்தார் இந்த வாகனத்தை சில மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது சம்பந்தமாக மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் திருடு போன தனது வண்டியை மீட்டு தரும்படி புகார் மனு அளித்திருந்தார் அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் சரக்கு வாகனம் திருட்டு நடைபெற்ற சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ்., கருவியின் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்ததில்
திருடப்பட்ட சரக்கு வாகனம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வழியாக கோயம்புத்தூர் பகுதிக்கு செல்வது தெரியவரவே போலீசார் விரைந்து செயல்பட்டனர் இதன் மூலம் திருப்பூர் மாவட்ட போலீசார் அலார்ட் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அந்த வண்டியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இது தொடர்பாக தஞ்சாவூர் ஏழு பட்டி கள்ளர்தெருவை சேர்ந்த சித்திரன் என்பவரது மகன் மாதவன் என்ற முருகன் மற்றும் கோவை காரமடையை சேர்ந்த கண்ணன் வயது 41 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்
ரூபாய் பல லட்சம் செலவு செய்து வாகனம் வாங்குவோர் அதை பாதுகாக்க சில ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவது வாகனத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்
