
மதுரை செல்லூர் பகுதியில் திருமணமான பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் தாயுடன் கைது
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சதீஷ் மனைவி கோட்டைத்தாய் வயது 28/2022, இவர் சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார் அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த அழகுராஜா வயது 25/2022, நள்ளிரவில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார் இதை பார்த்த கோட்டைத்தாய் சத்தம் போட்டார் இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அழகுராஜா தாயார் கனேஷ்வரியுடன் சேர்ந்து கோட்டைதாயை தாக்கினர். இது தொடர்பாக கோட்டைத்தாய் செல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுராஜா தாய் கனேஷ்வரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
