
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி-சங்கரன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மழையினால் ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக ஆங்காங்கே விபத்து ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனை சரிசெய்யும் நோக்கத்தில் 18.11.2019 -ம் தேதியன்று புளியங்குடி காவல்துறையினர் நகராட்சி உதவியோடு சாலையில் உள்ள பள்ளங்களில் கற்கள் கொண்டு நிரப்பி சாலைகளை சீரமைத்தனர். கடுமையான பணியின் இடையிலும் மக்களுக்காக சாலைகளை சீரமைத்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.