Police Department News

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை

திருச்சியில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 257 நாட்கள் சிறை

திருச்சி மாநகர காவல் ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி மதன் (எ) மதன்குமார்(எ) மணிகண்டன் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக, காந்தி மார்க்கெட் காவல்நிலைய ஆய்வாளரின் பிணையப்பட்ட அறிக்கையின்படி ரவுடியை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க மாட்டேன், குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை மேற்படி ரவுடி மதன் (எ) மதன்குமார் (எ) மணிகண்டன் தாக்கல் செய்துள்ளார்.
மேற்படி மதன் (எ) மதன்குமார் (எ) மணிகண்டன் நன்னடத்தை பிரமாண பத்திரம் தாக்கல் செய்த பின்பு, நன்னடத்தை பிரமாண பத்திரத்தை மீறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல கொலை, கொள்ளை வழக்கில் ஈடுபடுதல், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால் ரவுடி மதன் (எ) மதன்குமார் (எ) மணிகண்டன் மீது காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு
ஆஜர்படுத்தப்பட்டும் விசாரணை செய்தும், மேற்படி ரவுடி மதன் (எ) மதன்குமார் (எ) மணிகண்டன் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 257 நாட்களை சிறையில் கழிக்க நிர்வாக செயல்துறை நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மேற்படி ரவுடி மதன் (எ) மதன்குமார் (எ) மணிகண்டன் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.