
திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 13 வருடம் சிறை தண்டனை ரூ.3 ஆயிரம் அபராதம் – மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டி சேர்ந்த ஆண்டிச்சாமி(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை செய்த காரணத்தினால் 2018-ம் ஆண்டு வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆண்டிச்சாமிக்கு 13 வருடம் சிறை தண்டனையும் ரூ.3000 அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி
தீர்ப்பு வழங்கினார்
