

விருதுநகர் மாவட்டம்:-
நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் நடைபெறத்தான் செய்கிறது ஏதேனும் ஒரு இடத்தில்.
அதில் பெரிதும் பாதிக்கப்பட்டு துயரம் அடைபவர்கள் ஏராளம்தான்.
திருட்டில் புதுமை காட்டினாலும் அதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவும்,தடுக்கவும் என புதுமையை காட்டுவதுதான் காவல் துறை என்றால் அது சாத்தியம் என்று சத்தமின்றி சாதித்து வருகிறது.
குற்றத்தையும் அதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறையில் காவல் உதவி செயலி அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து மாவட்டத்திலும் பொது மக்கள் தெரிந்துகொள்ளவும் அதை தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் மத்தியில் மக்களை காக்கும் விதமாக அரும்பங்காற்றி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகர் இ.கா.ப அவர்கள் மற்றும் அருப்புக்கோட்டை துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களின் உத்தரவின்படி அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.செந்தில்வேல் அவர்களால் காலை அருப்புக்கோட்டை தங்க மயில் ஜூவல்லரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல் உதவி செயலி மற்றும் அதன் பயன்பாடு பற்றி விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜூவல்லரியில் பணியாற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அவரவர் ஸ்மார்ட் போனில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து காட்டினர்.
செய்தி உதவி
S.ரெங்கசாமி
