




25.07.2022 “செல்விருந் தோம்பி வருவிருந்து ” என்று நம் தமிழ் அன்பை காட்டும் வகையில்
சென்னை அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இன்று மாலை 6.00 மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை காவல் சாவடியில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி அடையாறு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் திரு .மகேந்திரன் I.P.S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு .நரேந்திரன் நாயர் I.P.S(காவல் இணை ஆணையாளர் தெற்கு) அவர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்புறையாற்றி காவல்துறை வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.” மற்றும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் திரு.மகேந்திரன் I.P.S அவர்கள் “
செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவருக்கு” என்று திருக்குறளில் உள்ள தமிழனின் அன்பு, மற்றும் உபசரிப்பு போன்ற பொற்சொற்களால் மாணவ ,மாணவிகள்,பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் காவலர்கள் ஊக்குவிக்கும் வகையில் பேசி விழாவை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்தனர்.
விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த காவல்துறையினர்
.J2 காவல் நிலையம் அடையாறு
திரு.நெல்சன்( Assistant Commissioner of Police (Law and order)
J2 காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமசுந்தரம் மற்றும் காவலர்கள்.
J5.காவல்நிலைய ஆய்வாளர் திரு.ரமணி( சட்டம் ஒழுங்கு) மற்றும் திரு.ராமலிங்கம்( ஆய்வாளர் குற்றப்பிரிவு)
J6&J8 நீலாங்கரை காவல் உதவி ஆணையாளர் திரு.சுதர்சன் மற்றும் திரு.மகேஷ் ஆய்வாளர் L&O மற்றும் திரு.மீனாட்சி சுந்தரம் ஆய்வாளர் L&O.
மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்.

.