Police Department News

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

கஞ்சா விற்ற 2 பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது… 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை கொடுங்கையூர் பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட ஒரு வீட்டிற்கு அதிக நபர்கள் வந்து செல்வதாகவும் மேலும் அந்த வீட்டில் சட்டத்திற்கு புறம்பான வேலைகள் நடப்பதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட போலீசார் நேற்று இரவு கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்கள் ஒரு திருநங்கை என 9 பேரையும் சுற்றிவரைத்து போலீசார் பிடித்தனர்.

மேலும் அந்த வீட்டில் இருந்து 12 கிலோ கஞ்சா ஐந்து கத்தி மூன்று இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அந்த வீட்டின் உரிமையாளர் தாரணி வயது 24 என்பதும் அவரது அக்கா வினோதினி வயது 25 என்பதும் தெரிய வந்தது இதில் தாரணி மீது கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

வினோதினி மீதும் கஞ்சா வழக்குகள் பல உள்ளன. இவர்கள் இரண்டு பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து அதனை ஆட்களை வைத்து வட சென்னையில் பல்வேறு இடங்களில் விற்று வந்தது தெரிய வந்தது.

இதில் திருநங்கையான ஹரிஹரன் வயது 22 நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த மதன் 22. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் 26. திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கவியரசன் 21. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் 22. குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் 20. கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கேப்ரல் மனோஜ் 20 ஆகிய ஏழு பேரும் இவர்களிடம் கஞ்சாவை வாங்கி அதை பல்வேறு இடங்களுக்கு சென்று விற்று வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து நேற்று அக்கா தங்கை இருவர் உட்பட ஒன்பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ரவுடிகள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.