
மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது
மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். மதுரை மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் அக்னிராஜ் (வயது 48). இவர் நேற்று இரவு நண்பர்கள் சரத்குமார், அகிலன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். காயம்பட்டி விநாயகர் கோவில் அருகே நின்ற சிலர் மீது வாகனம் மோதுவது போல வந்தது. இதனை அந்த பகுதியில் வசிக்கும் சிலர் தட்டி கேட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையில் முடிந்தது. அக்னிராஜ் உள்பட சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அக்னிராஜ் ஒத்தக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் (41), அஸ்வின்குமார் (28), சேதுராமன் (45), நந்தகுமார் (31) மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் காயாம்பட்டி சேதுராமன் (45) கொடுத்த புகாரின் பேரில் பெத்தணன் மகன் சரத்குமார் (24), சந்திரசேகர் (31), அகிலன், காயாம்பட்டி ராஜா மகன் ராஜ்குமார் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
