
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாரண்டஅள்ளிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது பேரூராட்சி தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு எம் ஏ வெங்கடேசன் அவர்கள் முன்னிலை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஆ. சேகர் அவர்கள் தலைமை ஏற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர். விழாவில் மாரண்டஅள்ளி பேரூராட்சி துணைத் தலைவரும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி கார்த்திகா பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரை கனி மற்றும் தன்னார்வ கல்வியாளர் திரு சிவப்பிரகாஷ் அவர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பள்ளிக்கு தேவையான கணினி பிரிண்டர் போன்றவற்றையும் வழங்கி சிறப்பித்தார் மேலும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி சிந்து அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் 100% வருகை புரிந்த மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் JRC சேர்ந்த மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு .அ.பழனிச்சாமி நன்றி உரையாற்றினார் விழாவை பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் சி மகேசு ஒருங்கிணைத்தார் விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
