குழந்தைகள் பாலியல் வன் கொடுமை தடுப்பு பற்றி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட போலீசாருக்கு டி.ஜி.பி. உத்தரவு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து கலந்துரையாட வேண்டும் என டி.ஜி.பி. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்
போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பள்ளி மாணவர்களை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் அவர்களுக்கு குழந்தைகள் உரிமை சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான வினாடி வினா கட்டுரை பேச்சு போட்டிகள் நடத்த வேண்டும் உயர் அதிகாரிகளும் மாணவர்களுடன் பேசி அவர்கள் சமூகத்தில் சிறந்து விளங்குவதற்கான ஆலோசனைகள் வழங்க வேண்டும்
இதன் வாயிலாக மாணவர்களுக்கு காவல் நிலையங்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் போலீசாருக்கான நல்லுறவு மேம்படும் மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பான தகவல் தாமதமின்றி கிடைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார் அதே போல் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு வாரம் கடைபிடிக்க பள்ளிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ் முருகன் ஆகியோர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.