
காரிமங்கலம் பந்தாரஅள்ளி அருகே விவசாயியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது
காரிமங்கலத்தை அடுத்த பந்தாரஅள்ளி அருகே உள்ள மேட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32). விவசாயி. சம்பவத்தன்று இவர், கல்லுகாரன்கொட்டாயில் உள்ள அவருடைய மாமனார் வீட்டில் கூரையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சின்னசாமி, இவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் நிலப்பிரச்சினை தொடர்பாக கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மண்வெட்டி மற்றும் கட்டையால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் காரிமங்கலம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சின்னசாமியை கைது செய்தனர். மேலும், அவருடைய மனைவி பழனியம்மாளை தேடி வருகிறார்கள்.
