
மதுரை வைகையாற்றில் கீழ் பாலத்தில் உள்ள அடைப்பை தனியாளாக நின்று அப்புறப்படுத்தி வெள்ள பெருக்கை கட்டுபடுத்தி போக்குவரத்தை சரி செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலருக்கு டி.ஜி.பி. பாராட்டு
கடந்த 13 ம் தேதி மதுரையில் பெய்த கன மழையால் செல்லூர் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கவே செல்லூர் D2 காவல் நிலைய தலைமை காவலர் ராமன் அவர்கள் தன் கைகளாலேயே அடைப்பை நீக்க குப்பைகளையும் ஆகாயதாமரை செடிகளையும் அகற்றி தண்ணீரை வடிய செய்து போக்குவரத்தை சரி செய்தார் இந்த காவலரின் தன்நலமற்ற. சிறந்த தொண்டையும் அவரது சிறப்பான பணியை பாராட்டி டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு அவர்கள் பணவெகுமதியளித்து பாராட்டினார்கள்
