மதுரை, செல்லூரில் சென்னையை சேர்ந்த இளம் பெண் காணவில்லை, செல்லூர் போலீசார் விசாரணை
சென்னை, ஆவடியில், கருணாநிதி 1 வது தெருவில் வசித்து வருபவர் சின்னன் மனைவி மொக்கவீரம்மாள் வயது 38/21, இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையியல் இவர் முருக்கு வியாபரம் செய்து வாழ்ந்து வந்தார், இவருக்கு ஒரு மகள் பெயர் சரண்யா வயது 20/21, இவர் மகாலெக்ஷிமி மகளீர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார், சமீப காலமாக இவர் தன் மாமா மகன் மொக்க காசி மாயன் என்பவரின் மகன் பாண்டி என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார், இதை இவரது தாயார் கண்டித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து சரண்யாவை மதுரை செல்லூரில் அஹிம்சாபுரம் 4 வது தெருவில் உள்ள தன் தங்கை மீனாச்சி அவர்களின் வீட்டில் தங்கவைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி இரவு 7.30 மணியளவில் தங்கை மீனாச்சி அவர்கள் சரண்யாவின் தாயார் அவர்களுக்கு போன் செய்து இரவு 7.20 க்கு கடைக்கு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை எனவும் தகவல் கூறியுள்ளார், உடனே சரண்யாவின் தாயார் மதுரை வந்து உறவினர்களின் வீடு, மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை, எனவே மதுரை, செல்லூர், D2, காவல்நிலையத்தில் தன் மகள் சரண்யாவை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி காணாமல் போன சரண்யாவை பற்றி விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
